இங்கிலாந்தில் 14 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக இந்திய இளைஞர் ஒருவர் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிராவ்னா பட் என்ற அந்த நபர், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு, தற்போது போஸ்ட்-ஸ்டடி விசாவில் இங்கிலாந்தில் வசித்து வருபவர்.

மேலும் சமூக வலைதளங்களில் சிறுமியுடன் ஆபாசமாக உரையாடியதாகக் கூறி, உள்ளூர் ஆர்வலர்கள் சிலர் அவரை மடக்கிப் பிடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவர்களிடம் சிக்கியபோது, “காவல்துறைக்கு மட்டும் தகவல் சொல்லிவிடாதீர்கள்” என அவர் கெஞ்சும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

இந்நிலையில் அந்தச் சிறுமிக்கு 14 வயதுதான் என்று தெரிந்த பிறகும் ஆபாசமாகத் தொடர்ந்து மெசேஜ் அனுப்பியதை ஒப்புக்கொண்ட அவர், தவறு செய்ததை உணர்ந்தும் அலட்சியமாக சிரித்த எமோஜிகளைப் பயன்படுத்தியது கடும் கண்டனங்களைச் சந்தித்துள்ளது.