தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை மீனாவின் மகள் நைனிகா நடிகர் விஜய் மகளாக தெறி திரைப்படத்தில் அடித்திருந்தார். சமீபத்தில் மீனாவின் 40 ஆண்டு கால திரை பயணத்தை முன்னிட்டு அவருக்கு மீனா 40 என்ற பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது அவரின் மகள் பேசிய வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அதில், அம்மா நீங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நீங்க ஒரு நடிகை இல்ல ஹீரோயினி இல்ல நீங்க என்னோட அம்மா.

நீங்கதானே நான் குழந்தையாய் இருக்கும்போது இருந்து என்னை பார்த்து கொள்கிறீர்கள். இனிமே நான் உங்களை பார்த்துக்க போறேன். அம்மாவை பற்றி நிறைய தப்பு தப்பான விஷயங்களை சோசியல் மீடியாவில் சொல்கிறார்கள். ப்ளீஸ் அப்படி யாரும் செய்யாதீங்க. உங்களைப் பற்றி யாராவது தப்பா பேசினா உங்களுக்கு கஷ்டமா இருக்கும் இல்லையா. அது மாதிரி தான் என்னோட அம்மாவுக்கும் இருக்கும். என் அம்மா நிறைய அழறாங்க ப்ளீஸ் இனிமே இப்படி செய்யாதீங்க என அவர் பேசியுள்ளார்.