தமிழ் சினிமாவின் பிரபல டைரக்டர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவரும் தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நெற்றிக்கண், கூழாங்கல், காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட் உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்கள்.

அண்மையில் டைரக்டர் விக்னேஷ் சிவனின் டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது. இதையடுத்து தன் Twitter கணக்கை விக்னேஷ் சிவன் மீட்டெடுத்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தன் வீட்டுக்கு நண்பர்கள் அனுப்பிய பிரியாணி பார்சல்களை போட்டோ எடுத்து “அன்பால் தானா சேர்ந்த பிரியாணி” என குறிப்பிட்டிருக்கிறார்.