தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 படத்திற்காக தயாராகி வருகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்நிலையில் நடிகர் அஜித் தந்தையின் மறைவுக்கு பிறகு மீண்டும் பைக் சுற்று பயணத்துக்கு சென்றுள்ளார். தற்போது நடிகர் அஜித் நேபாளத்தில் உள்ள பொகாரா என்ற இடத்தில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதோடு நேபாளத்தில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படமும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் அஜித் மீண்டும் பைக் சுற்று பயணம் சென்று விட்டதால் ஏகே 62 படப்பிடிப்பு ஆரம்பிக்க தாமதமாகும் என்று கூறப்படுகிறது.