உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஷாஹாபாத் காவல் நிலையம் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறது. பாஜக பூத் தலைவர் கௌரி பாண்டே கொலை மற்றும் காவல் தடுப்பறையில் ஒரு இளைஞரின் மரணம் ஆகியவை சட்டம்-ஒழுங்கு மீது கேள்விகளை எழுப்பியதோடு, காவல் துறையின் பெயரையும் கெடுத்துள்ளன.
இந்தச் சம்பவங்களால் பொறுப்பு ஆய்வாளர் உமேஷ் திரிபாதி, புதிய பொறுப்பு ஆய்வாளர் (குற்றப்பிரிவு) சிவ் கோபால் யாதவ், உப-ஆய்வாளர் வருண் குமார் சுக்லா மற்றும் டயல்-112 காவலர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால், காவல் நிலையத்தின் மீது “கிரக தோஷம்” இருப்பதாகக் கருதிய காவலர்கள், தொடர்ந்து நடக்கும் சம்பவங்களைக் கட்டுப்படுத்த புராண பாராயணம் நடத்த முடிவு செய்தனர்.
उत्तर प्रदेश के हरदोई पुलिस थाने में कानून-व्यवस्था बनाए रखने के लिए सुंदरकांड पाठ कराया गया
◆ पुलिसकर्मी हवन और प्रसाद वितरण कर आने वाले संकट से बचाव की प्रार्थना कर रहे हैं#HarDoaiPolice | Sunderkand | #ShahabadThana pic.twitter.com/GjilGkHVX7
— News24 (@news24tvchannel) September 3, 2025
இதையடுத்து, ஷாஹாபாத் காவல் நிலையத்தில் சுந்தரகாண்ட பாராயணமும், ஹவனமும் நடத்தப்பட்டன. புதிய பொறுப்பு ஆய்வாளர் ஆனந்த் நாராயண் திரிபாதி தலைமையில், சிஓ ஆலோக் ராஜ் நாராயண் உள்ளிட்ட காவல் நிலைய ஊழியர்கள் அனைவரும் இந்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்றனர்.
இசையுடன் கூடிய சுந்தரகாண்ட பாராயணத்திற்குப் பின், ஹவனமும், பிரசாத விநியோகமும் நடைபெற்றன. காவலர்கள், பஜரங்கபலியின் அருளால் காவல் நிலையம் பாதுகாக்கப்பட்டு, எதிர்கால துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என நம்புகின்றனர். ஆனால் இது ஒரு காவல் நிலையம் மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
