
புதுக்கோட்டையில் போலீஸ் என்கவுண்டரில் ரவுடி துரை சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். திருவரங்குளம் தைலம் மர காட்டு பகுதியில் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை ரவுடி துரை வெட்டிய பொழுது தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி துரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.