
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(62) பாலாஜி அவன்யூவில் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜவல்லிபுரம் போஸ்ட் ஆபீஸில் முருகன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் ஆர்.டி. புத்தகத்தில் பணம் செலுத்தி வந்தனர். அந்த பணத்தை முருகன் போலி கையெழுத்து போட்டு எடுத்துள்ளார்.
இதனை அறிந்த அஞ்சல் அலுவலக உதவி கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முருகன் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் முருகனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் முருகன் பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட குற்றவியல் பிரிவில் முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.