புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த உயர் மட்ட அரசியல் கூட்டத்தில் உக்ரைன் போர், ஈரான் நெருக்கடி மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து அவர் தீவிரமாக உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஊடகப் பிரிவில் இருந்த ஒரு கேமராமேன் அல்லது பத்திரிகையாளரின் மொபைல் போன் தொடர்ந்து சத்தமாக ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால் லாவ்ரோவின் உரைக்குச் சிறிய இடையூறு ஏற்பட்டது. இதனால் பொறுமையிழந்த அவர், அங்கிருந்த பாதுகாப்புப் படையினரை நோக்கி “நண்பர்களே, இவரை இங்கிருந்து வெளியேற்றுங்கள்!” என்று நகைச்சுவையாகக் கூறினார்.
‘SIR, if you don’t surrender your phone, they will TAKE OUT A GUN’ — FM Lavrov cracks a joke ahead of presser pic.twitter.com/xPOuWSkOau
— RT (@RT_com) May 15, 2026
“>
இதை தொடர்ந்து அந்தப் பத்திரிகையாளரைப் பார்த்து, “ஐயா, என்னை மன்னித்துவிடுங்கள் உங்கள் போனை நீங்கள் ஒப்படைக்கவில்லை என்றால், அவர்கள் துப்பாக்கியை எடுத்துவிடுவார்கள், உங்களுக்குத் தெரியும்தானே” என்று தனது வழக்கமான தீவிரமான முகபாவனையுடன் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தச் தீவிரமான மாநாட்டில், ரஷ்ய அமைச்சரின் இந்தத் திடீர் நகைச்சுவையான எச்சரிக்கை அங்கிருந்தவர்களிடையே பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த சுவாரசியமான சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
