இணையதளங்களில் இந்தியாவைப் பற்றி பரப்பப்படும் எதிர்மறையான கருத்துகளுக்கு மத்தியில், சிங்கப்பூரைச் சேர்ந்த உடற்பயிற்சி நிபுணரும் உள்ளடக்க உருவாக்குநருமான தியென் ராசிஃப், வட இந்தியாவில் தான் மேற்கொண்ட பயணத்தின் உண்மையான அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதனால் “நான் எச்சரிக்கப்பட்ட இந்தியா vs நான் அனுபவித்த இந்தியா” என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சிங்கப்பூரில் வளர்ந்த தனக்கு மற்றவர்கள் சொல்வதை மட்டும் நம்பாமல் இந்தியாவின் உண்மையான நிலையை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆரம்பத்தில் வட இந்திய நகரங்களின் போக்குவரத்து நெரிசல், தூசி மற்றும் மக்கள் கூட்டம் தனக்கு சற்று மலைப்பை ஏற்படுத்திய போதிலும், தாஜ்மஹால், ஜெய்ப்பூர் ஹவா மஹால் மற்றும் டெல்லியின் குதுப் மினார் போன்ற இடங்களின் கட்டிடக்கலை மற்றும் கலாச்சார பாரம்பரியம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக தியென் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tyen Rasif (@tyenrasif)

“>

இதனால் இந்தியாவைப் பற்றி இணையத்தில் வெளியாகும் மோசமான விளம்பரங்களைத் தாண்டி, தான் பல வளர்ந்த நாடுகளுக்குச் சென்றதைக் காட்டிலும் இந்தியாவில் அதிக பாதுகாப்பாக உணர்ந்ததாக தியென் ராசிஃப் கூறியுள்ளார். தனது பயணத்தின் போது உள்ளூர் வழிகாட்டிகளும், ஓட்டுநரும் தனக்கு பாதுகாவலர்களைப் போலவும் புகைப்படக் கலைஞர்களைப் போலவும் உதவிகரமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்திய மக்களின் விருந்தோம்பலையும் பாதுகாப்பான அணுகுமுறையையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இந்த நேர்மறையான வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதோடு, எதிர்மறை செய்திகளை விட இதுபோன்ற உண்மையான மற்றும் நல்ல பதிவுகள் இணைய அல்காரிதம்களால் பெரிதாக வைரலாக்கப்படுவதில்லை என்ற சமூகக் கருத்துகளையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.