மலையாள சினிமாவில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சிதம்பரம் இயக்கியிருந்தார். இந்த படத்தை பார்த்த தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் பட குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்கள்.

குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் பட குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் பலரையும் கவர்ந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதன்படி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி  தளத்தில் வருகின்ற மே மாதம் 3-ம் தேதி படம் வெளியாகிறது. மேலும் இந்த படம் உலக அளவில் 235 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.