ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி ஒருவர் ஐவிஎஃப் எனப்படும் செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சை மூலம் இரட்டைக் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1962-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினருக்கு நீண்ட காலமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. பல ஆண்டுகளாகக் குழந்தைப் பேறின்றி மிகுந்த மனவேதனையில் தவித்த இவர்களுக்கு, தங்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்ற இந்த மூதாட்டி, தீவிர மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஐவிஎஃப் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். சிகிச்சையின் பலனாக 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் கர்ப்பமடைந்த நிலையில், அதே ஆண்டு செப்டம்பர் 5-ம்திகதி தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை மூலம் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயாகியுள்ளார்.
அப்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் செய்தி, தற்போது மீண்டும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வயதில் குழந்தைகளைப் பெற்றெடுப்பது மகிழ்ச்சிக்குரியது என்றாலும், இவ்வளவு வயதான காலத்தில் இந்தத் தம்பதியால் குழந்தைகளை எப்படிச் சரியாகப் பராமரிக்க முடியும் என்ற நியாயமான கேள்வி மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
आंध्र प्रदेश की 74 वर्षीय दादी ने जुड़वां बच्चियों को जन्म दिया। दादी की शादी 1962 में हुई थी। 57 साल तक कोई बच्चा नहीं हुआ। पति की उम्र भी लगभग उतनी ही है।
दादी बच्चे के लिए बहुत परेशान थी। लेकिन के बच्चे नहीं हो रहे थे। लेकिन इनके एक पड़ोसी के 55 साल की एक महिला की IVF से… pic.twitter.com/DmAxjfc4GN
— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 30, 2026
“>
இருப்பினும், பல பத்தாண்டுகளாகக் குழந்தை இல்லாமல் ஏங்கித் தவித்த தம்பதிக்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
