
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தற்போது ரத்னம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் சமுத்திரக்கனி, கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் ராமச்சந்திர ராஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகிறது மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். அதன்படி ரத்னம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.