தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இதில் சங்கரின் இளைய மகள் அதிதி விருமன் படத்தின்  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடித்து வருகிறார். இதில் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு புதுச்சேரி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித்துடன் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 6 மாதத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு இன்று உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமண விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் மற்றும் இயக்குனர்கள் மணிரத்தினம், பாரதிராஜா உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சங்கரின் மகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.