தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது சூர்யா 42 திரைப்படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படம் வரலாற்று பாணியில் உருவாகும் நிலையில் 10 மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மார்ச் மாதத்தில் படத்தின் டைட்டில் வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் சூர்யா 42 திரைப்படத்தில் பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பதாக  தற்போது புது தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. இந்நிலையில் ஹைதராபாத்தில் சூர்யா 42 ஷூட்டிங் நடைபெற்ற போது நடிகர் சூர்யா பிரபாஸை சந்தித்து அவர் கொடுத்த விருந்தில் பங்கேற்றார். மேலும் நடிகர் பிரபாஸ் மற்றும் சூர்யா 42 திரைப்படத்தில் நடிப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.