
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், மனித பற்களை ஆய்வுக்கூடத்தில் வளர்த்து முதல் முறையாக வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த புதிய முன்னேற்றம் எதிர்காலத்தில் பல் இழந்தவர்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது என கூறப்படுகிறது.
இந்த பல் வளர்ச்சி சாத்தியமானது. Dr. அனா ஏஞ்சலோவா-வொல்போனி இந்த கண்டுபிடிப்பு dental care துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என தெரிவித்திருக்கிறார்.
ஆராய்ச்சியாளர் ஸ்யூசென் சாங் கூறுகையில், தற்போது பயன்படுத்தப்படும் பல் பொருத்தும் சிகிச்சைகள் மற்றும் இம்பிளான்ட் சிகிச்சைகளுக்கு மாற்றாக, இயற்கையாகவே பற்கள் மீண்டும் வளரத் தொடங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்படும் பற்கள், இயற்கையாகவே பற்கள் போல திசுக்களில் ஒன்றிணைந்து, நீண்டநாள் நம்பிக்கையுடன் பயன்படக்கூடியவையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், முன்கூட்டியே ஆய்வுக்கூடத்தில் முழு பல்லை உருவாக்கி அதை பொருத்தலாம். அப்படி இல்லை என்றால் பல் உருவாகும் ஆரம்ப நிலை செல்களை நேரடியாக நாக்கில் உள்ள பல் இடத்தில் வைத்து வளர வைக்கலாம் என்ற இரு வழிகளையும் ஆராய்ச்சி குழு பரிசீலிக்கிறது.
இது உண்மையான பல் போலவே வளர்ந்து, தானாகவே திசுக்களில் இணைந்து இயற்கையாக செயல்படும் என்பதால், இது பல் சிகிச்சை உலகத்தில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.