தீபாவளி போனஸ் 20% வழங்க கோரி தமிழக அரசுக்கு போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.  வருடம்தோறும்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசானது அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம்.  கொரோனாவுக்கு முன்பாக 20% ஆக இருந்தது. கொரோனாவிற்கு பிறகு 10% ஆக குறைக்கப்பட்டது. எனவே கடந்த ஆண்டுகளில் கொரோனாவை காரணம் காட்டி, 20% போனஸை 10%ஆக குறைத்ததைபோல் இந்த ஆண்டு செய்யக் கூடாது.

ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன் பணமாக Rs10,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என கூறினார்.