பெங்களூரு மாநகரில் போக்குவரத்து  நெரிசல் அதிகமாக காணப்படுவதால்  அவதியடைந்து வருகிறார்கள். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக  வாகன நெரிசல் வரி (Congession Tax) என்ற புதிய ஒழுங்குமுறையை அமல்படுத்தக் கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூருவுக்குள் நுழையும் வகையில் அமைந்துள்ள 9 சாலைகள் வழியாக பீக் ஹவர்களில் நுழையும் வாகனங்களுக்கு ‘Congestion Tax’ விதிக்கப்பட உள்ளது. இந்த வரியை, தற்போது வாகனங்களில் பயன்பாட்டில் இருக்கும் Fastag முறையின் மூலம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக  போக்குவரத்து நெரிசல் குறையும் என கருதப்படுகிறது.