ஒடிசா மாநிலத்தில் ஸ்க்ரப் டைபஸ் என்ற கொடிய நோய் பரவி வரும் நிலையில் இந்த நோயால் சமீபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததை தொடர்ந்து ஒடிசா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை மொத்தம் 211 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பரிசோதனை கருவிகள் உள்ளிட்டவை தட்டுப்பாடு ஏற்படாமல் சேவை கிடைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஓரியன்டா சுசுகாமுஷி என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பூச்சிகள் கடித்தால் இது பரவுகிறது. காய்ச்சல், தலைவலி மற்றும் தொண்டை வலி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் மரணத்தைத் தடுக்கலாம் என அறிவுத்தப்பட்டுள்ளது.