பொறியியல் படிப்புக்கான கட்டணம் 25 சதவீதம் வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்டு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கட்டண நிர்ணய குழுவிடம் விண்ணப்பித்துள்ளனர். இதனால் வரும் கல்வியாண்டு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு ஒதுக்கீட்டில் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 85 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.