மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து 2092 பேருந்துகளுடன் 2970 சிறப்பு பேருந்துகள் உட்பட 7154 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் அதே தேதிகளில் பிற ஊர்களில் இருந்து 3060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.