கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நெல்லை மாவட்டம் சிதம்பரம் வரை இயக்கப்படும் அரசு பேருந்து ஒன்றில், நடுரோட்டில் பயணிகள் பஸ்ஸை சிறைபிடித்து வீடியோ எடுத்த பரபரப்பு சம்பவம் எக்ஸ் வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த பேருந்தில் பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த போது, “நேரம் இல்லை” என்று சாக்குப்போக்கு சொல்லி, பஸ்ஸை ஆவரக்குளம் ஊருக்குள் கொண்டு செல்லாமல் நடுவழியில் அம்பலவானபுரம் சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு கிளம்பப் பார்த்துள்ளனர்.

இதனால் கொதித்தெழுந்த பயணிகள், பஸ்ஸை எடுக்க விடாமல் மறித்து, தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் ஒன்று திரண்டு வீடியோ பதிவு செய்து பிரச்சனை செய்ததால், வேறு வழியில்லாமல் இறக்கிவிடப்பட்ட பயணிகளை மீண்டும் பஸ்ஸிலேயே ஏற்றி, ஆவரக்குளம் ஊருக்குள்ளேயே கொண்டு போய் விட்டனர்.

இந்த சம்பவத்தின் போது பேருந்தில் இருந்த பயணி ஒருவர், கடும் ஆத்திரத்தில், “பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து விசிலுக்கு ஓட்டு போட்டீங்கள.. அனுபவிங்க!” என்று செம ஆக்ரோஷமாகவும் கோபமாகவும் பேசிய டயலாக் பார்ப்போரைக் அதிர வைத்துள்ளது. அரசு பஸ் ஊழியர்களின் இந்த போக்கும், அதற்கு பயணி ஒருவர் கொடுத்த ஆவேசப் பதிலடி வீடியோவும் இப்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.