
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் என்னும் பகுதி உள்ளது. அப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். அதன் பிறகு வளர்ப்பு விலங்குகளை வனவிலங்குகள் வேட்டையாடும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அப்பகுதியில் வாழும் ஆடு மாடுகளை கருஞ்சிறுத்தை ஒன்று வேட்டையாடியது. இதனை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் சிறுத்தையின் கால் தடம் இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கால் தடத்தை கண்டு சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து தற்போது அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வனவிலங்குகளின் நடமாட்டம் வனத்துறையினரால் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது. மேலும் பொது மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.