திருச்சி: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்கும் பணியை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் தாய்க்கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், திருச்சியைச் சேர்ந்த அமமுகவின் ஐடி விங்க் மாநில  துணைச் செயலாளர் இளையராஜா, திருச்சி வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரான டோல்கேட் ரெமோ , திருச்சி மாவட்ட கழக அவைத்தலைவர் ராமு , மாவட்ட மீனவரணி செயலாளர் கண்ணதாசன் உட்படப் பல நிர்வாகிகள் பலர்  அதிமுகவில் முறைப்படி இணைந்தனர்.

அவர்களுக்கு அதிமுக தலைமைக் கழகம் சார்பில் பொறுப்புகள் வழங்கப்பட்டு, கட்சியை மேலும் வலுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.