தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு மாநாடு சமீபத்தில் ஈரோட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த மாநாட்டில் ஏராளமான ரசிகர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் போது திமுகவை நடிகர் விஜய் கடுமையாக விமர்சித்த நிலையில் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை மறைமுகமாக களத்தில் இல்லாத கட்சி என்றும் குறிப்பிட்டார். அதன் பிறகு அண்ணா மற்றும் எம்ஜிஆர் தமிழகத்தின் சொத்து என்றும் அவர்களின் பெயர்களை பயன்படுத்தக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்றும் கூறினார்.
நடிகர் விஜய் திமுகவை தீய சக்தி என்று கூறியதோடு கொள்ளையடிக்கும் கட்சி என்றும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த நிலையில் அதற்கு திமுக மூத்த தலைவர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மீதான விமர்சனங்களுக்கு தற்போது செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தவழும் குழந்தைகள்தான் பெரியவர்கள் ஆவார்கள். பெரியவர்கள் ஆன பிறகு தான் தன்னாட்சி நடத்துவார்கள். நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும். மேலும் பொங்கல் முடிந்த பிறகு எங்களுடைய திருப்புமுனையை பார்த்து இந்த நாடே வியக்கும் என்று கூறினார்.
