தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளான அதிமுக உள்ளிட்ட கட்சிகள், ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் தலா ₹5,000 வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து கசிந்த தகவல்களின்படி, தமிழக அரசு தலா ₹3,000 ரொக்கப் பணத்தை பொங்கல் பரிசாக வழங்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த ரொக்கத் தொகையானது, மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படவுள்ளது.
