2026 தைப்பொங்கல் பண்டிகையைத் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் தலா ரூ. 3,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை வரும் ஜனவரி 8-ம் தேதி முதலமைச்சர் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
பணத்தோடு மட்டுமல்லாமல், பொங்கல் கொண்டாட்டத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களும் அடங்கிய சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் தலா ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம், ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் இலவச வேட்டி மற்றும் சேலையும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள இந்த மெகா பரிசுத் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
