தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொடர்பாக கூட்டுறவு ஊழியர்களுக்கு மண்டல இணை பதிவாளர் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதன்படி பொங்கல் பரிசில் வழங்கப்படும் பச்சரிசி தரமானதாக இருக்க வேண்டும். அதன் பிறகு வெள்ளை நிறத்தில் இருக்கும் சர்க்கரையை மட்டும் தான் விநியோகம் செய்ய வேண்டும். 6 அடி அல்லது அதற்கு மேல் உயரமுள்ள முழு கரும்பினை மட்டும்தான் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு  500 ரூபாய் தாள்களாக தான் கொடுக்க வேண்டும். மேலும் பயனாளிகளிடம் பொங்கல் பரிசு வாங்குவதற்கு வேறு தேதிக்கு வாருங்கள் என்று சொல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.