பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அமித்தாபச்சன். இவர் மும்பையில் பட சூட்டிங்காக காரில் சென்ற போது சாலையில் ஏற்பட்ட டிராபிக் ஜாம் காரணத்தினால் கார் விட்டு இறங்கி பைக்கில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்றார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வருகிறது. இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்தா பச்சன், ரைட்டுக்கு நன்றி நண்பா, நீங்க யார் என்று எனக்கு தெரியாது, சரியான நேரத்தில் லிப்ட் கொடுத்து உதவியதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.