தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனைப் போலவே சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல மே 20 நாளை முதல் மே 24ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பக்தர்கள் மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொடைக்கானல், உதகை மற்றும் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பல இடங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக இருப்பது நல்லது.
