தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பி.டெக் மாணவன் அபினவ் என்பவர் விபரீத முடிவெடுத்துள்ளார். அபினவ் 4-வது மாடியிலிருந்து குதித்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதல்கட்ட விசாரணையில், வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதற்காகப் பேராசிரியர் கண்டித்ததால், அபினவ் இந்தத் துயரமான முடிவை எடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
