ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றுப் போட்டியில், இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி சுலபமாக வெற்றிப் பெறும் நிலையில் இருந்தது.
முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. பாகிஸ்தான் அணியின் ஷாஹிப்சாதா ஃபர்ஹான் 45 பந்துகளில் 58 ரன்கள் விளாசி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை வழங்கினார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 171/5 ரன்கள் குவித்தது.
இலக்கைத் துரத்திய இந்திய அணியில், அபிஷேக் சர்மா (74 ரன்கள்) மற்றும் சுப்மன் கில் (47 ரன்கள்) கூட்டணி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. இந்தியா இன்னும் ஏழு பந்துகள் மீதமுள்ள நிலையில் இலக்கை எட்டியது. இதற்கிடையில், பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹானின் சிக்ஸர் கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் இன்னிங்ஸின் 10வது ஓவரில், அக்சர் படேல் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து அரைசதத்தை கடந்த ஃபர்ஹான், துப்பாக்கி சுடும் சைகையை (AK-47 போல) செய்து கொண்டாடினார். இதனால், இந்திய ரசிகர்கள் X தளத்தில் கடுமையாக விமர்சனம் மேற்கொண்டனர்.
मैच चल रहा है या युद्ध?
बल्ला AK-47 बन गया — क्या खेल की जगह अब जंग लेगी?
जो खेल है, उसे खेल रहने दो। #INDvPAK pic.twitter.com/5fz0Re9CYR— अपूर्व اپوروا Apurva Bhardwaj (@grafidon) September 21, 2025
மகாராஷ்டிரா மாநிலம் சார்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் கூட இந்தச் செயலை கண்டித்து, அதனைப் பொறுப்பற்ற நடவடிக்கையாக கூறியுள்ளார்.
Sahibzada Farhan just proved on the field how Pakistani terrorists slaughtered 26 innocents in Pahalgam—gunning them down like it was nothing.
Reached his fifty and gripped the bat like an AK-47, firing boundaries!
This spit in the face of BCCI & Modi govt is peak humiliation.… pic.twitter.com/ojOxocKJfU— Sanjay Raut (@rautsanjay61) September 21, 2025
போட்டிக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்தார். “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியை ‘போட்டி’ என அழைப்பதை நிறுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். தரநிலைகளில் பெரும் வேறுபாடு உள்ளது,” என்று அவர் புன்னகையுடன் பதிலளித்தார்.
மேலும் பத்திரிகையாளர் தனது கேள்வியில் “பகைமை அல்ல, தரநிலைகள்” என்பதே நோக்கம் என விளக்கியதும், சூர்யகுமார் நக்கலான சிரிப்புடன் “ஐயா, போட்டியும் தரமும் ஒன்றுதான். இப்போது ‘போட்டி’ என்றால் என்ன? 15 போட்டிகளில் 8-7 என்றால் அதனை ‘போட்டி’ எனலாம். இங்கே 13-1, அல்லது 12-3 போலவே உள்ளது. எந்தப் போட்டியும் இல்லை,”
எனப் பேசிய அவர், சிரித்தபடியே செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேறினார்.
