பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி அனுமதி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சரக்கு வாகனம் தவிர 3000 கிலோ எடைக்கு குறைவான வாகனங்களுக்கும், மெத்தனால் மற்றும் எத்தனாளில் இயக்கப்படும் போக்குவரத்து வாகனங்களுக்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில் தமிழக அரசு இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.