ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான முதல் மோதலில், இளம் வீரர் பிரஃபுல் ஹிங்கே ஒரு அதிரடியான சாதனையைச் செய்தார். அந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியை முதல் பந்திலேயே அவுட் செய்து அதிர்ச்சியளித்தார்.
போட்டிக்குப் பிறகு பேசிய ஹிங்கே, சூர்யவன்ஷியை வீழ்த்த தான் ஏற்கனவே திட்டமிட்டதாகவும், பயிற்சியாளர் வருண் ஆரோனின் உதவியுடன் அந்த விக்கெட்டை வீழ்த்தியதாகவும் பெருமையாகக் கூறினார்.
15 வயதே ஆன சூர்யவன்ஷிக்கு அந்தச் சமயம் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன, இது அவரை சற்று பாதித்தாலும் அவரது தன்னம்பிக்கையை மட்டும் குறைக்கவில்லை.
தற்போது நடந்த இரண்டாவது மோதலில், சூர்யவன்ஷி அதற்குச் சரியான பதிலடி கொடுத்துள்ளார். ஹிங்கே வீசிய ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மிரட்டிய அவர், வெறும் 37 பந்துகளில் 103 ரன்கள் குவித்து சதமடித்தார்.
“யாராவது என்னைப் பற்றித் தனிப்பட்ட முறையில் விமர்சித்தால், அதற்கு எனது பேட் மூலம் பதில் அளிப்பேன்” என்று அவர் போட்டிக்குப் பிறகு தெரிவித்தார். இந்த அபாரமான ஆட்டத்தின் மூலம் ‘ஆரஞ்சு கேப்’ வரிசையிலும் அவர் முதலிடம் பிடித்தார்.
A first-ball duck a few days ago to the fastest century by an Indian last night.
Vaibhav Sooryavanshi just refuses to give up 👏💗 pic.twitter.com/IqDaWvkAu9
— Rajasthan Royals (@rajasthanroyals) April 26, 2026
“>
பயமின்றி விளையாட வேண்டும் என்ற தனது திட்டமே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும், விமர்சனங்களுக்குத் தனது திறமையால் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
