கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் ஒரு 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான அருண்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததோடு அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். அந்த சிறுமியின் தந்தையின் கண் முன்னே கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது. இதற்கு அந்த சிறுமியின் அத்தையும் உடந்தையாக இருந்த நிலையில் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அந்த தகவலின் படி காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து தற்போது தலைமறைவாக உள்ள அருண்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த சிறுமிக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்