கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டா அருகே ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். டிசம்பர் 31-ம் தேதி குடும்பத்தைச் சேர்ந்த வாலிபர் தனது பெற்றோர் மற்றும் சகோதரியை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டார். அதன் பிறகு சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத்து வந்து அதன் பைப்பை வீட்டுக்குள் வைத்து கியாஸ் திறந்து விட்டுள்ளார். வீடு முழுவதும் கியாஸ் பரவியது. அவர் வீட்டை தீ வைத்து கொளுத்தி விடுவேன் என விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் போலீசாரை கற்களால் தாக்கியுள்ளார். ஆனாலும் போலீசார் வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். இதுகுறித்து விசாரித்த போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், தங்களுக்கு தெரியாமல் இப்படி தவறு நடந்து விட்டதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் எனவும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
