அப்பா அம்மாவுக்கு சர்ப்ரைஸ் ஆக புதிய கார் வாங்கி கொடுத்து அவர்களின் நீண்ட நாள் ஆசையை நடிகர் அசோக் செல்வன் நிறைவேற்றியுள்ளார். தனது பெற்றோர் சிரமப்படக் கூடாது என்ற எண்ணத்தில் டொயோட்டா ஹைக்ராஸ் ஹைபிரிட் காரை அவர் வாங்கித் தந்துள்ளார். அவர்களுக்கு திருமணம் நடந்த 1986 ஆம் ஆண்டை  குறிக்கும் வகையில் 1986 நம்பர் பிளேட்டையும் வாங்கிக் கொடுத்து திக்கு முக்காட வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்