ஹரியானா மாநிலம் கர்னாலில் விஞ்ஞானி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த பள்ளி வேன் டிரைவர் கிருஷ்ணகாந்த் என்பவர், அங்கிருந்த முதியவரைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையடிக்க கிருஷ்ணகாந்த் திட்டமிட்டதாகத் தெரிகிறது.

ஆனால், அந்த நேரத்தில் அக்கம் பக்கத்தினர் துரிதமாகச் செயல்பட்டு வீட்டிற்குள் நுழைந்ததால், அந்த நபர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

அண்டை வீட்டாரின் சமயோசித புத்தியால் ஒரு பெரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதுடன், குற்றவாளியும் சம்பவ இடத்திலேயே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாதுகாப்பான பகுதி என்று கருதப்படும் இடத்தில் நடந்த இந்தத் துணிச்சலான கொலை முயற்சி சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.