மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வேளாண் அமைச்சரும், சபாநாயகருமான பி.பி. தங்கச்சன் (86) காலமானார்.

ஆலுவாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று  காலமானார்,பெரும்பாவூர் தொகுதியிலிருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். மேலும், 12 ஆண்டுகள் பெரும்பாவூர் நகராட்சியின் தலைவராகவும், யூ.டி.எஃப். ஒருங்கிணைப்பாளராக 13 ஆண்டுகள் சேவையாற்றியவர்.

கூட்டணிக் கட்சிகள் மற்றும் காங்கிரஸுக்குள் உள்ள குழு பிரிவுகளை சமாளிக்க சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர். அவரது மறைவுக்கு, கே.பி.சி.சி தலைவர் சன்னி ஜோசப், பி.கே. குஞ்சாலிக்குட்டி, பி.ஜே. குரியன் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு நாளை பெரும்பாவூரில் நடைபெறவுள்ளது.