அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் (72) இன்று காலை உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் வசித்து வரும் அவர் தன்னுடைய வீட்டில் அமர்ந்திருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அப்படியே சரிந்து விழுந்த மரணம் அடைந்தார்.
இவர் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவர்களில் ஒருவராக திகழ்ந்த இவர் அதிமுக கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் வகித்துள்ளார். மேலும் இவரது மறைவுக்கு தற்போது எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
