தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்து, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு, அதற்கான தீர்வுகளை அரசு அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று வழங்கும் இந்த திட்டம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திவ்யா சத்யராஜ் வெளியிட்ட வீடியோவில், “நம்ம முதல்வரின் உத்தரவுப்படி, அரசுத் துறையின் அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கே வந்து உங்கள் குறைகளை கேட்பார்கள். அதற்கான விரைவான தீர்வுகளும் வழங்கப்படும்.  இந்த திட்டத்தின் மூலம் உங்களுடைய நேரமும் வீணாகாது, எதிலும் சிரமம் இருக்காது” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், முதல்வர் ஸ்டாலின் இயற்றிய காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் போன்ற பல முன்னோடி திட்டங்களைத் தொடர்ந்து, “உங்களுடன் ஸ்டாலின்” முகாமும் அரசு மக்களை நேரடியாக அணுகும் இன்னொரு சிறந்த முயற்சி என கூறியுள்ளார்.