எத்தியோப்பியா நாட்டில் பழங்குடி மக்களிடையே ஒரு வினோதமான விழா நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஆண்கள் தங்கள் தொப்பைகளை வளர்த்து போட்டியில் பங்கேற்க வேண்டும். அப்படி பங்கேற்பவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்ட சிறப்பிக்கப்படுவார்கள். இது போன்ற பெரிய தொப்பை வைத்திருக்கும் ஆண்களை தான் பெண்கள் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

தொப்பைகளை வளர்த்து போட்டியில் பங்கேற்கும் ஆண்களில் யாருக்கு பெரிய தொப்பை இருக்கிறதோ அவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். அந்த நபரை பெண்கள் போட்டி போட்டு திருமணம் செய்து கொள்வார்கள். இதற்காக ஆண்கள் ஆறு மாதங்கள் கடுமையாக உழைத்து தொப்பையை வளர்ப்பார்களாம். இந்த வித்தியாசமான விழா எத்தியோப்பியா நாட்டில் போடி இன பழங்குடி மக்களிடையே நடைபெறுகிறது.