ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், கடும் வறுமை காரணமாக ஒன்றரை வயதுடைய தனது ஆறாவது பெண் குழந்தையை உயிருடன் சாக்கடையில் வீசிக் கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர். மனிதாபிமானமற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சாக்கடை கால்வாயில், இரும்பு வலையில் சிக்கிய நிலையில் ஒரு குழந்தையின் உடல் இருப்பதை பள்ளி மாணவர்கள் இருவர் தற்செயலாகக் கண்டனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டனர். பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண் குழந்தை உயிருடன் இருக்கும்போதே சாக்கடையில் வீசப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்தக் கொடூரத்தைச் செய்தது யார் என்று தேடிய போலீசாருக்கு அங்கிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகள் முக்கிய ஆதாரமாக அமைந்தன. ஒரு பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சாக்கடைப் பகுதிக்குச் செல்வதும், சிறிது நேரத்தில் குழந்தை இல்லாமல் திரும்பி வருவதும் அதில் பதிவாகியிருந்தது. அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்த குற்றப்பிரிவு போலீசார், அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
फरीदाबाद में एक मां की दरिंदगी, 18 महीने की बच्ची को नाले में फेंका, CCTV फुटेज आया सामने
पूरी खबर: https://t.co/Ly0Sp2NoUZ#Faridabad pic.twitter.com/f37wXWXX4Y
— NDTV India (@ndtvindia) April 27, 2026
விசாரணையில் பிடிபட்ட பெண், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நீலம் என்பது தெரியவந்தது. தனது கணவர் சஞ்சய் மற்றும் 6 பெண் குழந்தைகளுடன் ஃபரிதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதியில் அவர் வசித்து வந்துள்ளார். தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நீலம் போலீசாரிடம் கூறுகையில், எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், ஆறாவதாகப் பிறந்த இந்தப் பெண் குழந்தையை வளர்க்க வசதி இல்லை. வறுமையின் காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுத்தேன் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது சொந்தக் குழந்தையைச் சாக்கடையில் வீசிக் கொன்ற தாயின் செயல் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
