டெல்லி காவல்துறையில் பெண் கமாண்டோவாகப் பணியாற்றி வந்த பெண், அவரது கணவராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, ஆத்திரமடைந்த கணவர் கனரக உடற்பயிற்சி கருவியான ‘டம்பிள்ஸ்’ கொண்டு மனைவியின் தலையில் பலமுறை தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் அதிக இரத்தப் போக்கால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கொடூரச் செயலைச் செய்த பிறகு, குற்றவாளியான கணவர் தானாகவே முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். உயிரிழந்த பெண் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவில் கமாண்டோவாகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையின் பின்னணியில் உள்ள மற்ற காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பாதுகாப்புக் காவலருக்கே வீட்டிற்குள் இத்தகைய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
