உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பணத் தகராறு காரணமாக ஒரு பெண்ணையும், அவரது கண்பார்வையற்ற மகனையும் மிகக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. 35 வயதான கிஷன் ராவத் என்ற நபர், அந்தப் பெண்ணை முதலில் பலாத்காரம் செய்துவிட்டு, பின்னர் அவரைக் கொலை செய்துள்ளார். அப்போது தனது தாயைக் காப்பாற்ற முயன்ற கண்பார்வையற்ற சிறுவனையும் அந்த அரக்கன் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளான். பண விவகாரத்தில் ஏற்பட்ட பகையே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் எனப் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

​இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு தப்பியோடிய கிஷன் ராவத்தை லக்னோ போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்ற அவனுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் ஒரு காவலர் காயமடைந்த நிலையில், போலீசார் நடத்திய அதிரடி என்கவுண்டரில் கிஷன் ராவத்தின் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து நிலைதடுமாறிய அவனை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கைது செய்தனர். “குற்றவாளிகளுக்கு இடமில்லை” எனத் தற்போதைய உபி அரசு காட்டி வரும் அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த என்கவுண்டர் பார்க்கப்படுகிறது.