பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர், தனக்கு எதிராக இருந்த சீட்டில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் தன்னை இடைவிடாமல் முறைத்துப் பார்ப்பதைக் கண்டு கடும் சங்கடத்திற்கு உள்ளானார்.
View this post on Instagram
முதலில் அதைத் தவிர்க்க முயன்ற அந்தப் பெண், அந்த நபர் தொடர்ந்து அநாகரிகமாகப் பார்ப்பதைக் கண்டு, தனது பாதுகாப்பிற்காக அந்தச் செயலை ரகசியமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த முதியவர் அமர்ந்திருந்தது அவருக்கு ஒதுக்கப்பட்ட சீட்டே இல்லை என்பதும், அந்த சீட்டுக்குரிய நபர் வந்த பிறகுதான் அவர் அங்கிருந்து நகர்ந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ சுமார் 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வரும் நிலையில், “பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான இத்தகைய அநாகரிகமான செயல்கள் கண்டிக்கத்தக்கவை” என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
