ராஜஸ்தான் மாநிலம் பார்மரில், பெண் ஒருவரை அடித்து அரை நிர்வாணமாக்கி ரோட்டில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. திருமணமான ஆணுடன் தகாத உறவில் ஈடுபட்டதற்காக அந்த பெண் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீடியோ வைரலானதை தொடர்ந்து 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய எஸ்.பி நீரஜ் ஷர்மா, “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை மேற்கொண்டு யாரும் பகிர வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.