கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்துக்கு எதிராக ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் நிகழ்ந்த மற்றொரு அதிர்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கூட்டத்தில் ஏற்பட்ட அவசரநிலையில், பெண் ஒருவர் மயங்கி விழுந்தார் என்பதற்காக, துரித சிகிச்சைக்காக வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கியதற்கான கேள்விக்கு இதுவரை விடை அளிக்காத நிலையில், தற்போது அந்த ஓட்டுநர்களே தாமாகவே முன்வந்து உண்மையைத் தெரிவித்துள்ளனர்.
“ஒரு பெண் மயங்கி விழுந்ததால், அவரை தூக்க முயன்ற சிலர், அந்தப் பெண்ணின் ஆடையைத் தவறுதலாக கிழித்து விட்டார்கள். அவள் மனமுடைந்து அழுததை பார்த்ததும், என் சட்டையை கழட்டி அந்த பெண்ணிற்கு கொடுத்து போட்டேன். உடனே சட்டையில்லாமல் இருந்த என்னை, யார், ஏன், என்ன காரணம் என்று கேட்காமல், 10 பேர் சேர்ந்து சரமாரியாக அடித்தனர்,” என அந்த ஓட்டுநர் வேதனையுடன் பகிர்ந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, “நிஜத்தைத் தெரியாமல் தாக்கும் அமைதி கலைந்த கூட்டம் தான் தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்களா?” என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்து, “இது ஒரு சிக்கலான சைக்கோ கூட்டம் போலிருக்கு”, “உண்மையை புரிந்து கொள்ளாமல் பொதுமக்கள் மீதே கை வைக்கும் நிலைக்கு தொண்டர்கள் சென்றிருக்கிறார்கள்” என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கூட்டத்துல ஒரு அக்கா மயங்கி விழுந்துட்டாங்க அவங்களை தூக்குறேன்னு அவங்க துணி கிழிஞ்சீருச்சு அதனால் தான் என் சட்டையை கலட்டி போட்டு விட்டேன்
உடனே சட்டை இல்லாம யாருடா நீ ட்ரைவர்னு அடிச்சி இருக்கானுங்க 10 பேரு சேர்ந்து
மாபெரும் சைக்கோ கூட்டம் இவனுங்க 👍
நாசமா போவீங்கடா டேய் pic.twitter.com/yLpFA31CxP
— சிலுவை (@SiluvaM_) October 3, 2025
