சில மாதங்களுக்கு முன்பு காவல்துறை அதிகாரிகளால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாருக்கு நியாயம் கோரிய போராட்டத்தை நடத்திய  நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய், அந்த தருணத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரடியாக விமர்சித்து, “எந்த ஒரு பிரச்சனை நடந்தாலும், நீங்கள் அதிகபட்சமாக கூறுவது – ‘நடக்க கூடாத ஒன்று நடந்து விட்டது, சாரிமா’ தான். இது ஒருவருடைய உயிர். இது சரியான பதிலா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் தற்போது, கரூரில் நடந்த துயரச் சம்பவம் குறித்து வெளியிட்ட வீடியோவில் விஜய், “நடக்க கூடாத ஒன்று நடந்து விட்டது” என்ற அதே வார்த்தையை பயன்படுத்தி, மன்னிப்பு கோரியுள்ளார். இதனால், அவரது நிலைப்பாடு குறித்து மக்கள் மத்தியில் கலக்கமும் விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “See, பிரச்சினை என்னன்னா… ஒரே ஆளை ஸ்கிரிப்ட் எழுத வைங்க, சார். அப்போதான் இந்த மாதிரி continuity issue இருக்காது” என கடுமையாக விமர்சித்து, “இனிமேல் உங்கள் உரைக்கு எழுதிக் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு பிழையில்லாத, உறுதியான வார்த்தைகள் எழுதச் சொல்லுங்கள்” என சாடியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, விஜய் ஒரு அரசியல் தலைவராக வளர்ந்திருக்கிறாரா, இன்னும் ஒரு நடிகரின் கட்டமைக்கப்பட்ட வசனத்தில்தான் பேசுகிறாரா? என்கிற கேள்வியை தீவிரமாக எழுப்பி, அவரது நிர்வாக திறனைப்பற்றிய விமர்சனங்களை மக்களிடையே எழுப்பி உள்ளது.