இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக செல்லப் பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் குழந்தைகளைப் போலவே வளர்க்கப்படுகின்றது.

சில நேரங்களில் வீட்டு எஜமானின் உயிரை காப்பாற்றுவதிலும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் நாய் ஒன்று அமர்ந்திருந்த பெண்ணின் உயிரை நொடி பொழுதில் காப்பாற்றியுள்ளது. ஆரம்பத்தில் நாய் செய்வது குறித்த பெண்ணுக்கு மிகுந்த கோபமாக இருந்த நிலையில் பிறகு சில நொடிகளில் தான் ஆபத்திலிருந்து தப்பி உள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த வியக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.