தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ள நிலையில் சமீபத்தில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெற தகுதி உள்ளவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஆயிரம் ரூபாய் பெற ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது. குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தால் வயதில் மூத்த பெண் விண்ணப்பிக்கலாம். வீடுகளுக்கே சென்று விண்ணப்ப படிவத்தை ரேஷன் கடை பணியாளர்கள் வழங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பெண்கள் நேரடியாக ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும். விண்ணப்ப பதிவின் போது பாஸ்வேர்டு அனுப்பப்படும். அதனால் செல்போனை எடுத்துச் செல்ல வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.